ஐயப்பா, ஒவ்வொரு கார்த்திகைத் திங்கள் உத்திரத்தின் போதும் எங்கள் ஐயப்பன் . ஆலயத்தில் பிரம்மோத்ஸவ திருவிழா இத்தனை சிறப்புடன் அமைவது நாங்கள் செய்த பாக்கியம்..
நடைபெற்ற மகா அன்னதான நிகழ்வில் மனதைத் தொட்டவை..
1. ஒவ்வொரு முறையும் பச்சிளங் குழந்தைகளை வைத்துக்கொண்டும்தள்ளாத வயதில் வரும் பெரியவர்களையும் சோதித்துப் பார்க்கும் வருணனும், சூரியனும் இப்போது கருணை காட்டியதற்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும்!
2. இவ்வளவு அழகாக நடத்திக் காண்பிக்கும் நம் ஆலய நிர்வாகிகளுக்கும், சேவையாளர்களுக்கும் நம்மால் சிறு சிரமம் கூட இருக்க கூடாது. என்று முடிவு செய்தது போல் மக்களின் அற்புதமான ஒத்துழைப்பு.
3. மக்கள் தரிசனம் தரிசனம் செய்வது, அமர்ந்து உணவு அருந்துவது, பிரசாதம் வழங்குவது இப்படி ஒவ்வொன்றும் எந்த சல சலப்பும் இல்லாமல் சிறப்பாக செய்வதென்னவோ நம் நிர்வாகத்தினருக்கு கை வந்த கலை.
ஒவ்வொரு முறையும் உணவு அருந்திய அடுத்த நிமிடமே அழகாக சுத்தம் செய்து, எல்லாவற்றுக்கும் மேல் இத்தனை ஆயிரம் பேர் உணவருந்திய இடமா இது என்று வியப்பில் ஆழ்த்துகிறது நம் சேவையாளர்களின் அளப்பரிய சேவை.
எத்தனையோ சேவையாளர்களை பாராட்ட நினைக்கிறது என் மனம். இப்படி ஒரு தன்னார்வலர்கள், கட்டமைப்பை எங்கும் பார்த்ததில்லை.
நம் ஆலயத்திற்கு மட்டும் கிடைத்த ஒரு பெருமை. மக்களும் இத்துனை ஒத்துழைப்பா? எப்படி இறைவா இங்கு மட்டும் அது சாத்தியமாகிறது?
சமையல் வல்லுனர்கள் குழுமம் இத்தனை ஆயிரம் பேருக்கு இப்படி ஒரு சுவையான விருந்து கொடுப்பதென்பது ஆச்சரியம்தான்.
அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
A. N. S. T. சிவலிங்கம்